சென்னைச் சாலைகளில் மேலும் 10,000 மலர்ச் செடிகள்

1 mins read
7832089b-e80f-4aa0-8d01-7f45a5379357
சென்னையை அழகுபடுத்த சாலைத் தடுப்புகளில் மலர்ச் செடிகளை நட மாநகராட்சி திட்டம். - கோப்புப் படம்

சென்னை: சென்னைச் சாலைகளில் சென்னை மாநகராட்சி மலர்ச் செடிகளை நட்டு வருகிறது.

தமிழகத்தின் தலைநகரைப் பொலிவுறச் செய்யும் வகையில் மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன், தீவிர தூய்மைப் பணி, இரவு நேரத் தூய்மைப் பணி, பூங்காக்களில் தீவிர தூய்மைப் பணி, பேருந்து நிழற்குடைகளில் தூய்மைப்பணி, சுவரொட்டிகளை அகற்றுதல், சாலையோரம் நீண்ட காலமாக நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களை அகற்றுதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

அதன் தொடர்ச்சியாக மாநகரச் சாலைகளை மலர்ச் செடிகளால் அலங்கரிக்கத் திட்டமிட்டுள்ளார்.

“சென்னை மாநகராட்சி சார்பில் சாலை நடுவே 113 தீவுத் திட்டுக்கள், 104 சாலைத் தடுப்புகளில் வனத்துறை உதவியுடன் 10,000 மலர்ச்செடிகளை நட்டு சென்னையை அழகுபடுத்தத் திட்டமிட்டிருக்கிறோம்” என்று அவர் கூறினார்.

சென்னைக்குள் பாரிஜாதம், பவளமல்லி, மகிழம், மந்தாரை உள்ளிட்ட 12 வகையான மலர்ச்செடிகளை நட திட்டமிடப்பட்டுள்ளது. பருவமழை தொடங்கி, அந்த நீரில் வளரும் விதமாக, நவம்பர்15ஆம் தேதிக்குள் செடிகளை நடும் பணிகளை முடிக்க முடிவு செய்திருப்பதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்