தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

30 நிமிடம் நிறுத்தாமல் தற்காப்புக் கலைகள்; 102 மாணவர்கள் உலகச் சாதனை

1 mins read
8a72b6e0-b0be-4506-ae16-5d764d3e94e2
நிகழ்ச்சியின் முடிவில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் பயிற்சிப் பள்ளிக்கும் சான்றிதழும் பதக்கமும் வழங்கப்பட்டன. - படம்: தமிழக ஊடகம்

மாமல்லபுரம்: கல்பாக்கம் அடுத்த சதுரங்கபட்டினம் டச்சுக்கோட்டை அருகே உள்ள கடற்கரையில் தற்காப்புக் கலையின் உலகச் சாதனைச் சான்றிதழ் தேர்விற்காக ஆசான் மார்ஷியல் ஆட்ர்ஸ் மற்றும் ஸ்போர்ட்ஸ் அகாடெமி இன்டர்நேஷனல் சார்பில், குலோபல் வோர்ல்டு ரெக்கார்ட் அமைப்பின் அதிகாரி ராஜேஸ்குமார் முன்னிலையில் 30 நிமிடத்தில், 3 வயது முதல் 20 வயது வரையான 102 பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் சாதனை முயற்சியில் ஈடுபட்டனர்.

அவர்கள் சுருள்வாள்வீச்சு, வேல்கம்பு, வாட்டர் பேலன்ஸ், பைட்டிங் ஸ்டிக், சிலம்பம் ஒற்றைச் சுற்று, இரட்டைச் சுற்று ஆகிய தற்காப்புக் கலைகளை தொடர்ந்து செய்து காண்பித்தனர்.

நிகழ்ச்சியின் முடிவில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும், பயிற்சிப் பள்ளிக்கும் சான்றிதழும் பதக்கமும் வழங்கப்பட்டன. மாமல்லன் தெக்கன்களரி ஆசான் அசோக்குமார், மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, கல்பாக்கம் அணுமின் நிலைய இயக்குநர் சேஷையா, திருக்கழுகுன்றம் பேரூராட்சி தலைவர் யுவராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

குறிப்புச் சொற்கள்