தமுக்கம் மைதானத்தில் தொடங்கிய 11 நாள் புத்தகத் திருவிழா

தமுக்கம் மைதானத்தில் தொடங்கிய 11 நாள் புத்தகத் திருவிழா

1 mins read
da6611b4-3b98-4a31-a910-879bcead4d73
புத்தகத் திருவிழா. - கோப்புப் படம்: ஊடகம்

மதுரை: மதுரை தமுக்கம் மைதானத்தில் உள்ள மாநாட்டு மையத்தில் 11 நாள்களுக்குத் தொடரும் புத்தகத் திருவிழா வெள்ளிக்கிழமை முதல் நடைபெற்று வருகிறது. தினமும் மாலை 6.00 முதல் இரவு 9.00 மணி வரை நடைபெறும் இவ்விழா வரும் 16ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புத்தகத் திருவிழாவில் 200க்கும் மேற்பட்ட முன்னணி பதிப்பகங்களின் புத்தக அரங்குகள், குழந்தைகளுக்கு பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த ராட்டினங்கள், சுவையான, ஆரோக்கியமான சிற்றுண்டிகளை வழங்கும் உணவுக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

புத்தகத் திருவிழாவில் தினந்தோறும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகள், பிரபல எழுத்தாளர்கள், பட்டிமன்றப் பேச்சாளர்கள் பங்கேற்கும் சிந்தனை அரங்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.

குறிப்புச் சொற்கள்