தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

1,200 பேர் திரண்டு சிலம்பத்தில் உலக சாதனை

1 mins read
2e859578-0fbb-440e-9836-f7b1a559e981
குன்னூர் வெலிங்டன் கன்டோன்மென்ட் திடலில் ஒன்றுகூடி சிலம்பம் சுழற்றிய 1,200 பேர். - படம்: தமிழக ஊடகம்

குன்னூர்: தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களையும் சேர்ந்த 1,200 மாணவர்கள், குன்னூரில் திரண்டு இடைவிடாமல் 78 நிமிடம் 24 நொடிகளுக்குச் சிலம்பம் சுழற்றி உலக சாதனை படைத்தனர்.

இந்தியாவின் 78ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, அவர்கள் இச்சாதனையை நிகழ்த்தினர்.

தமிழர்களின் தற்காப்புக் கலையான சிலம்பத்தை ஊக்குவிக்கும் நோக்கில், தேசிய சிலம்பப் பள்ளிகள் கூட்டமைப்பும் வஜ்ரம் விளையாட்டு மேம்பாட்டுக் கூட்டமைப்பும் இணைந்து இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தன.

நீலகிரி மாவட்டம், குன்னூர் வெலிங்டன் கன்டோன்மென்ட் திடலில் ஞாயிற்றுக்கிழமையன்று (செப்டம்பர் 8) இந்நிகழ்ச்சி இடம்பெற்றது.

சிலம்ப உலக சாதனை நிகழ்வில் மாணவர்களும் பெண்களும் பங்கேற்றனர். அவர்கள் கண்ணைக் கட்டிக்கொண்டும் பானைகள்மீது நின்றவாறும் சிலம்பம் சுழற்றி பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தினர்.

ஆண்களுக்கு நிகராகப் பெண்களும், மாற்றுத்திறனாளிகளும் இடைவிடாது சிலம்பம் சுழற்றி, ‘ராயல்புக்’ உலக சாதனையில் தங்கள் பெயரைப் பதிவுசெய்தனர்.

சிலம்பத்துடன் பரத நாட்டியம், கராத்தே, ஓவியம், சதுரங்கம், யோகா, இசை போன்ற வேறு பல போட்டிகளும் நடத்தப்பட்டு, வெற்றியாளர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

குறிப்புச் சொற்கள்