தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தமிழகம் முழுவதும் 1,256 முகாம்கள்: ஸ்டாலின் அறிவிப்பு

2 mins read
9705dc07-3873-47ab-9168-8d27f565640b
தமிழகத்​தின் 38 மாவட்​டங்​களி​லும் நடை​பெறும் இந்த முகாம்​களில் அமைச்​சர்​கள், எம்பிக்​கள், எம்​எல்​ஏக்​கள், உள்​ளாட்சிப் பிரதிநிதி​கள் பங்​கேற்​பர். - படம்: ஊடகம்

சென்னை: ‘நலம் காக்​கும் ஸ்டா​லின்’ என்ற பெயரில், தமிழகம் முழு​வதும் இன்று (ஆகஸ்ட் 2) முதல், சிறப்பு மருத்​துவ முகாம்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து மக்​களும் பயன்​பெறும் வகையி​ல் 1,256 இடங்களில் இந்த முகாம்கள் நடைபெறும் என முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

சுகா​தாரத் துறை சார்​பில், ‘மக்​களைத் தேடி மருத்து​வம்’, ‘நம்மை காக்​கும் 48’ ஆகிய திட்​டங்​களைத் தொடர்ந்​து, மருத்​துவச் சேவை​களைக் கடைக்​கோடி குடிமகனுக்கும் கொண்டு சேர்க்க வேண்​டும் என்ற எண்​ணத்​தில், ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்​டம் உருவாக்கப்பட்டதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“தமிழகத்​தின் 38 மாவட்​டங்​களி​லும் நடை​பெறும் இந்த முகாம்​களில் அமைச்​சர்​கள், எம்பிக்​கள், எம்​எல்​ஏக்​கள், உள்​ளாட்சிப் பிரதிநிதி​கள் பங்​கேற்​பர்.

“388 வட்​டாரங்​களில், தலா மூன்று என 1,164 முகாம்​கள், மண்​டலத்​துக்கு ஒன்று என சென்னை மாநக​ராட்​சி​யில் 15 முகாம்​கள், 10 லட்​சம் மக்​கள்​தொகைக்கு அதி​க​மாக உள்ள 5 மாநக​ராட்​சிகளில் தலா 4 என 20 முகாம்​கள், அதை​விட குறைந்த மக்​கள்​தொகை உள்ள 19 மாநக​ராட்​சிகளில் தலா 3 என 57 முகாம்​கள் என்று மொத்​தம் 1,256 முகாம்​கள் நடத்த திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது,” என்று திரு ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகாமில் அனைத்து பயனாளி​களுக்​கும் கண், காது, மூக்​கு, தொண்டை, பல் மருத்​துவ சேவை​கள் வழங்​கப்​படும் என்றும் பொது மருத்​துவ நிபுணர் அறி​வுறுத்​தலின்​படி ‘எக்​ஸ்​ரே’, ‘ஈசிஜி’, ‘யுஎஸ்​ஜி’, கருப்பை வாய், மார்பகப் புற்​று​நோய் பரிசோதனை​களும்

செய்​யப்பட உள்​ளன என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.

பயனாளி​களின் ரத்த மாதிரி​கள் சேகரிக்​கப்​பட்​டு, ரத்த அழுத்​தம் உள்​ளிட்ட பரிசோதனை விவரங்​கள் அவர்​களுக்கு குறுஞ்​செய்தி வாயி​லாக முகாமிலேயே உடனடி​யாக தெரிவிக்​கப்​படும்.

பொது மருத்​து​வம், அறுவை சிகிச்​சை, இதயம், எலும்​பியல், நரம்​பியல், தோல், காது, மூக்​கு, தொண்​டை, மகப்​பேறு, இயன்​முறை, பல், கண், மனநலம், நீரிழி​வு, குழந்​தைகள் நலன், நுரை​யீரல், கதிரியக்​க​வியல் மற்​றும் இந்​திய மருத்​து​வம் சார்ந்த சிறப்பு நிபுணர்​களை கொண்டு ஆலோ​சனை​கள் வழங்​கப்பட உள்​ளதாக திரு ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு மேலும் தெரிவிக்கிறது.

குறிப்புச் சொற்கள்