தமிழ்நாடு உலகளாவிய சுற்றுலா மாநாட்டில் 127 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து

தமிழ்நாடு உலகளாவிய சுற்றுலா மாநாட்டில் 127 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து

2 mins read
1c268e2e-52d8-4edd-b2f1-7184045e88f5
சென்னை, மாமல்லபுரத்தில் நடைபெறும் தமிழ்நாடு உலகளாவிய சுற்றுலா மாநாட்டை திங்கட்கிழமை (02-02-2026) மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். - படம்: தி இந்து

சென்னை: தமிழ்நாடு உலகளாவிய சுற்றுலா மாநாட்டை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் நடைபெறும் இந்த மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சுற்றுலாத்துறை சார்பில் ரூ.22,794 கோடி மதிப்பில் 127 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதன்மூலம் 65,000க்கு மேற்பட்டோர் வேலை வாய்ப்பைப் பெறுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மாநாடு சுற்றுலாத் தலங்களை மேம்படுத்துவதற்கும், சுற்றுலா முதலீட்டாளர்களுடன் பொது தனியார் பங்களிப்பை ஊக்குவிப்பதற்கும் ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும் என சுற்றுலாத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாமல்லபுரம் அருகே நடக்கும் உலகளாவிய சுற்றுலா மாநாட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகின. ‘பிரிஹேட் ஹோட்டல் வெஞ்சர்ஸ்’ நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ.1,100 கோடி முதலீடு செய்கிறது. இதன் மூலம் 900 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி கிழக்கு கடற்கரை சாலையையொட்டி உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் ‘தமிழ்நாடு உலகளாவிய சுற்றுலா உச்ச மாநாடு - 2026 நடைபெறுகிறது.

இந்த நிலையில், திங்கட்கிழமை நடந்த முதல் நாள் மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கி வைத்தார்.

இந்த மாநாடு பல்வேறு சுற்றுலாத் தலங்களை மேம்படுத்துவதற்கும், சுற்றுலா முதலீட்டாளர்களுடன் பொது தனியார் பங்களிப்பை ஊக்குவிப்பதற்கும் ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும் என சுற்றுலாத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டில் முதலீட்டாளர்கள், மேம்பாட்டாளர்கள், டெவலப்பர்கள், ஆபரேட்டர்கள், முடிவெடுப்பாளர்கள், கூட்டாளர்கள், ஆதரவாளர்கள் மற்றும் பல்வேறு உலகப் புகழ்பெற்ற நிறுவனங்களைச் சேர்ந்தோர் என மொத்தம் 2,500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர்.

தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலாத்தலங்களை மேம்படுத்தும் விதமாக உலகளாவிய சுற்றுலா மாநாடு நடைபெற உள்ளது. மேலும் தமிழகத்தில் சுற்றுலா தொடர்பான வேலைவாய்ப்பும் வர்த்தக வளர்ச்சியும் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த மாநாட்டில் உரையாற்றிய ஸ்டாலின், சுற்றுலாத் தலங்களில் காட்சி முனைகளை அமைக்கவும், ஏற்கெனவே இருக்கும் வசதிகளை மேம்படுத்தவும் ரூ.612 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாத் தலங்களை மேம்படுத்தி, எண்ணற்ற சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க வேண்டும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.

‘பைஹேட் ஹோட்டல் வெஞ்சர்’ நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ.1,100 கோடி முதலீடு செய்கிறது. இதன் மூலம் 900 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.

குறிப்புச் சொற்கள்