திருப்பூர்: தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த பங்ளாதேஷ் குடிமக்கள் 13 பேர் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர்.
13 பேரும் கடந்த ஓராண்டுக்கும் மேலாக திருப்பூரில் தங்கியிருந்து ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தது தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர், வேளம்பாளையம் பகுதியில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது நான்கு நான்கு பேரைப் பிடித்தனர்.
முதலிபாளையம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போது மேலும் 9 பேர் பிடிபட்டனர்.
இவர்கள் 9 பேரும் 26 முதல் 38 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் உரிய ஆவணங்கள் இல்லாமல் முறைகேடாக தங்கியிருந்தனர் என்றும் காவல்துறை தெரிவித்தது.

