டிசம்பரில் 131% அதிக மழை

1 mins read
5e393ba4-0cc6-473d-9b23-9b597a3215dd
டிசம்பரில் இந்தியாவின் பல பகுதிகளில் இயல்பான அளவைவிட அதிகளவில் இருக்கும் என்று வானிலை மையம் கூறியுள்ளது.  - படம்: ஏஎஃப்பி

சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், கடலோர ஆந்திர பிரதேசம், யாணம், ராயல்சீமா, கேரளம், மாஹே, தெற்கு கர்நாடகத்தின் உள்புறப் பகுதிகள் ஆகிய வானிலை ஆய்வு மண்டலங்களை உள்ளடக்கிய தென் தீபகற்ப இந்தியாவில், டிசம்பர் மாதத்தில் மாத சராசரி மழைப்பொழிவு, இயல்பான அளவைவிட அதிகளவில் இருக்கும் என்று வானிலை மையம் கூறியுள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரையில், இந்தக் காலகட்டத்தின் இயல்பான மழைப்பொழிவு அளவில் 121% கூடுதலாக இருக்கும். அதிலும் குறிப்பாக, மேற்கு-மத்தியப் பகுதிகளில் பெரும்பாலான இடங்களிலும், கிழக்கு-மத்தியப் பகுதிகள், வடகிழக்கு பகுதிகளில் சில இடங்களிலும் அதிக மழைப்பொழிவை எதிர்பார்க்கலாம்.

வடக்கு, வடமேற்கு பகுதிகளில் பெரும்பாலான இடங்களிலும், கிழக்கு-மத்தியப் பகுதிகள், வடகிழக்கு பகுதிகளில் அநேக இடங்களிலும் இயல்பான அளவைவிட குறைவான மழைப்பொழிவே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்