சென்னை: அடுத்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஆளுமை திறன்கொண்ட ஆகச் சிறந்தவர்கள் வேட்பாளர்களாக களமிறக்கப்படுவர், அவர்களில் 134 பேர் இளையர்களாக இருப்பர் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
ஜூன் மாத இறுதிக்குள் அனைத்து வேட்பாளர்களும் அறிவிக்கப்படுவர் என்று செய்தியாளர் கூட்டத்தில் திரு சீமான் அறிவித்தார்.
செய்தியாளர் கூட்டத்தில் திரு சீமான், முதல்வர் மு.க.ஸ்டாலினைப் பற்றிக் கேள்வியும் எழுப்பினார். திரு ஸ்டாலின் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நடந்த நித்தி ஆயோக் சந்திப்பில் கலந்துகொண்டதற்கு எதிராக திரு சீமான் கண்டனம் தெரிவித்தார்.
ஒருவேளை சந்திரபாபு நாயுடு அல்லது நிதீஷ் குமார் பாஜக கூட்டணியிலிருந்து விலகிக்கொண்டால் திமுக, தனது 22 உறுப்பினர்களுடன் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவு கொடுப்போம் என்ற எண்ணம் இருக்கலாம் என்று திரு சீமான் கருத்துரைத்தார். அதன் காரணமாக திரு ஸ்டாலின் நித்தி ஆயோக் சந்திப்பில் பங்கேற்றிருக்கலாம் என்றார் அவர்.