தமிழக நிதியமைச்சர் முயற்சியால் கண்டெடுக்கப்பட்ட 13ஆம் நூற்றாண்டு கல்வெட்டு

தமிழக நிதியமைச்சர் முயற்சியால் கண்டெடுக்கப்பட்ட 13ஆம் நூற்றாண்டு கல்வெட்டு

1 mins read
68565f09-6e28-44de-a9fd-da0ae599cf78
கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு. - படம்: இந்து தமிழ் திசை

விருதுநகர்: கி.பி. 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்று, தமிழக நிதியமைச்சர் தங்​கம் தென்​னரசு முயற்சியால் கண்டெடுக்கப்பட்டது.

விருதுநகரில் உள்ள மல்​லாங்​கிணறு அமைச்சரின் சொந்த ஊராகும். அண்மையில் அங்குள்ள பெரு​மாள் கோவிலில் குடமுழுக்கு சிறப்பாக நடந்தேறியது.

திரு தங்​கம் தென்​னரசு வீட்டுக்கு எதிரே அமைந்துள்ள இக்கோவிலில் குடமுழுக்குக்கு முன்னதாக திருப்பணிகள் நடைபெற்றன. அப்போது கோவிலின் உட்புறத்தில் உள்ள அர்த்த மண்டபப் பகுதியை அவர் பார்வையிட்டார்.

அச்சமயம் அங்கிருந்த சுவர்​களில் சில கல்​வெட்​டுத் துண்​டு​களும் அவற்றில் தமிழ் எழுத்துகள் இருப்​பதையும் கண்ட அவர், உடனடியாக பாண்​டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையத்​தின் செய​லா​ளர் சாந்​தலிங்​கத்தை தொடர்​பு​கொண்​டார்.

அக்​கல்​வெட்டைப் படி​யெடுத்துப் படிக்க உரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்​டும் என அமைச்சர் கேட்​டுக்​கொண்​டதன் பேரில், ஐந்து கல்​வெட்​டு​கள் படி​யெடுக்கப்பட்டன.

ஆய்வின்போது, அவை அனைத்தும் கி.பி. 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்பது உறுதியானது. அச்சமயம் பாண்​டியர் காலத்​தில் கல்​குறிச்சி எனும் ஊரில் ஒரு சிவன் கோவில் இருந்​ததும், அது இடிந்​து​விட்​ட​தால் அங்​கிருந்த கற்​களைக் கொண்​டு​வந்து மல்​லாங்​கிணறு பெரு​மாள் கோவில் கட்​டப்​பட்​டது என்​பதும் தெரியவந்​துள்​ளது.

மல்​லாங்​கிணறுக்​குக் கிழக்கில் ஐந்து கிலோ மீட்டர் தூரத்​தில்தான் கல்​குறிச்சி உள்​ளது. ஏற்​கெனவே, இந்த ஊரில் கி.பி. 13ஆம் நூற்​றாண்​டைச் சேர்ந்த முத்​தரையர் தலை​வனின் பாடல் கல்​வெட்டு கண்​டறியப்​பட்​டுள்​ளது குறிப்​பிடத்​தக்​கது.

குறிப்புச் சொற்கள்