சென்னை: தமிழ்நாட்டில் இந்த ஆண்டு, தென்மேற்குப் பருவமழை இயல்பைவிட 15% கூடுதலாகப் பெய்துள்ளது.
சென்னையில் மட்டும் இயல்பைவிட 37% கூடுதலாக பெய்துள்ளது என வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்தது.
சென்னையில் இயல்பான நிலையில் 51.7 மில்லி மீட்டர் மழை பொழியும் நிலையில் திங்கட்கிழமை (ஜூன் 23) வரை 70.7 மி.மீ மழை பொழிந்துள்ளது.
இயல்பான நிலையில் 42.3 மில்லி மீட்டர் மழை பொழியும் நிலையில் இன்று வரை 48.6 மி.மீ மழை பொழிந்துள்ளது.