தமிழகத்தில் 15 டன் நெகிழிப் பொருள்கள் பறிமுதல்

1 mins read
fcfabb5a-491f-4865-85af-4d4100c3523a
தமிழகத்தில் ஒற்றைப் பயன்பாட்டு நெகிழிப் பொருள்களைச் சட்டவிரோதமாகத் தயாரித்து வந்த 200க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. - படம்: பியூர்கல்ட்

சென்னை: தமிழகம் முழுவதும் 15.56 டன் நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஏறக்குறைய 9,200 கடைகளில் இருந்து அவை பறிமுதல் செய்யப்பட்டன.

இதையடுத்து ரூ. 12.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது என தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரியம் தெரிவித்தது. இவ்வாரியமும் உள்ளாட்சி அமைப்புகளும் பிற தொடர்புடைய துறைகளுடன் இணைந்து தடை செய்யப்பட்ட நெகிழிப்பொருள்களைப் பறிமுதல் செய்ய நடவடிக்கையை மேற்கொண்டது.

சாலையோர வியாபாரிகள் முதல் மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களில் பறக்கும் படைகள் மூலம் திடீர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த வகையில் 9,248 கடைகளில் நடத்தப்பட்ட ஆய்வின்போது 2,553 விதிமீறல்கள் கண்டறியப்பட்டு 15.56 டன் ஒற்றைப் பயன்பாட்டு நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தமிழகத்தில் ஒற்றைப் பயன்பாட்டு நெகிழிப் பொருள்களைச் சட்டவிரோதமாகத் தயாரித்து வந்த 200க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்