சென்னை: வரைவு வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரைச் சேர்க்க இதுவரை 1.3 லட்சம் பேர் விண்ணிப்பித்துள்ளதாக தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் தீவிரத் திருத்தப் பணி அண்மையில் நடைபெற்றது. இதில் மாநிலம் முழுவதும் 97 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டன.
இதையடுத்து, பெயர் விடுபட்டவர்கள் பல்வேறு காரணங்களால் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெற முடியாதவர்கள் மீண்டும் தங்கள் பெயரைச் சேர்க்க வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதன்படி, மாநிலம் முழுவதும் 153,571 பேர் தங்களின் பெயரைச் சேர்க்க விண்ணப்பித்துள்ளனர்.
வரைவு வாக்காளர் பட்டியல் தமிழகம் முழுவதும் உள்ள 75,000 வாக்குச் சாவடிகளில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த 19 முதல் 21ஆம் தேதி வரை, அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி முகவர்கள் சார்பில், 2.51 லட்ச மனுக்கள், பெயர்களைச் சேர்க்க தேர்தல் அதிகாரிகள் அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டுள்ளன.
தமிழகம் முழுவதும் 15.18 விழுக்காட்டு வாக்காளர்கள் நீக்கப்பட்ட நிலையில், வரைவு வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்களைச் சேர்க்க 1.53 லட்சம் பேர் விண்ணப்பித்திருப்பதாக தலைமைச் செயலதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.

