மேயர் பிரியா உட்பட 157 கவுன்சிலர்கள் சொத்துக் கணக்கை அளிக்கவில்லை

மேயர் பிரியா உட்பட 157 கவுன்சிலர்கள் சொத்துக் கணக்கை அளிக்கவில்லை

1 mins read
eee1a4e5-2412-4d4b-9e1c-a4d27f88b786
சென்னை மாநகராட்சி வளாகம். - படம்: இந்து தமிழ் திசை

சென்னை: சென்னை ​மாநக​ராட்​சி​யின் மேயர் பிரியா உள்​ளிட்ட 157 மாமன்ற உறுப்பினர்கள் (கவுன்​சிலர்​கள்) சட்ட விதி​களின்​படி, தங்களுடைய சொத்துக் கணக்கை அளிக்​க​வில்லை எனத் தகவல் வெளி​யாகி​ உள்​ளது.

கடந்த 2022ஆம் ஆண்டு தமிழ்​நாடு நகர்ப்​புற உள்​ளாட்​சிகள் சட்​டத்தில் தமிழக அரசு மேற்கொண்ட திருத்தத்தின்படி, நகர்ப்புற உள்ளாட்சி கவுன்சிலர்கள் தங்களுடையது மட்டுமின்றி, மனைவி, குழந்தைகளின் சொத்துக்கணக்குகளை பதவியேற்ற 90 நாள்களுக்குள் மாநகராட்சி ஆணையரிடம் வழங்க வேண்டும் என்பது விதிமுறை.

இந்​நிலை​யில், ஆம் ஆத்மி கட்​சி​யைச் சேர்ந்த வழக்​கறிஞர் சங்​கர் என்​பவர் சென்னை மாநக​ராட்சி கவுன்​சிலர்​கள் தாக்​கல் செய்த சொத்​துக் கணக்கு விவரங்​கள் குறித்​து, தகவல் அறி​யும் உரிமை சட்​டத்​தின்கீழ் கேட்​டிருந்​தார். இதற்கு மாநக​ராட்சி நிர்​வாகம் பதிலளித்துள்ளது.

சென்னை மாநக​ராட்​சி​யில் உள்ள 200 வார்டு கவுன்​சிலர்​களில் 157 பேர் சொத்​துக் கணக்கை தாக்​கல் செய்​ய​வில்​லை என்றும் அவர்களில் நால்வர் ஏற்​கெனவே உயி​ரிழந்​து​விட்​டனர் என்றும் பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இருவர் தகுதிநீக்​கம் செய்​யப்​பட்​டு​ள்ள நிலையில், மீதமுள்ள 43 கவுன்​சிலர்​கள் மட்​டுமே சொத்​துக் கணக்கைத் தாக்​கல் செய்​துள்​ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநக​ராட்சி மேயர் பிரி​யா, துணை மேயர் மு.மகேஷ்கு​மார் உள்​ளிட்ட 157 கவுன்​சிலர்​கள் சொத்துக்கணக்கைத் தாக்கல் செய்யவில்லை எனவும் மாநகராட்சித் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்