சென்னை: தமிழகத்தில் கடந்த 12 நாள்களில் மட்டும் 17 பேருக்கு கொரோனா தொற்றுப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த ஓராண்டாக தொற்றுப்பரவல் குறைந்திருந்த நிலையில் ஆங்காங்கே மீண்டும் சிலர் பாதிக்கப்பட்டு வருவதாக தினமலர் ஊடகச்செய்தி தெரிவிக்கிறது.
தற்போது சென்னை, கோவை, கன்னியாகுமரி, மதுரை, செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமையன்று சென்னை, சேலம், நெல்லை, திருப்பூர் மாவட்டங்களில் 67 பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையின்போது 4 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
எனினும், பொதுமக்கள் அச்சப்படும் அளவுக்கு பாதிப்பு எதுவும் இல்லை என சுகாதாரத்துறை அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.