174 சளிக்காய்ச்சல் மருந்துகள் தரமற்றவை

174 சளிக்காய்ச்சல் மருந்துகள் தரமற்றவை

1 mins read
e51214a2-5f39-4c10-a0d2-ee53fce586d5
ஆயிரத்திற்கு மேற்பட்ட மருந்து, மாத்திரைகளை இந்திய, தமிழ் நாடு மருத்துவத் தரக்கட்டுப்பாட்டு வாரியங்கள் ஆய்வு செய்தன. - படம்: தமிழ் சமயம்

சென்னை: சளி, காய்ச்சலுக்கான மருந்துகளில் 174 மருந்துகள் தரமற்றவை என்று இந்தியாவின் தரக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் விற்பனை செய்யப்படும் அனைத்து மாத்திரை, மருந்துகளையும் மத்திய, மாநில தரக்கட்டுப்பாட்டு வாரியங்கள் ஆய்வு செய்கின்றன. இதுவரை செய்யப்பட்டுள்ள ஆய்வின் அடிப்படையில், குறைந்தது 167 மருந்துகள் தரநிலையை எட்டவில்லை, மற்றவை போலியானவை என்றும் உறுதியாகியுள்ளது.

ஆய்வில் தரநிலையை எட்டாத அல்லது போலி மருந்துகள் என உறுதிசெய்யப்பட்டதும், தயாரிப்பு நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று வாரியம் தெரிவித்துள்ளது.

அதன்​படி, கடந்த மாதம் 1,000க்​கும் மேற்​பட்ட மருந்துகள் ஆய்​வுக்கு உட்​படுத்​தப்​பட்​டன. அதில், காய்ச்​சல், சளி, கிரு​மித்தொற்​று, செரிமானப் பிரச்​சினை உள்​ளிட்ட பாதிப்​பு​களுக்கு பயன்​படுத்​தப்​படும் 167 மருந்துகள் தரமற்​ற​தாக​வும், 7 மருந்துகள் போலி​யாக​வும் இருந்​தது கண்​டறியப்​பட்டு அது தொடர்பான நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்