மெரினா கடற்கரையில் 18.5 டன் குப்பை

மெரினா கடற்கரையில் 18.5 டன் குப்பை

1 mins read
8b8932a0-c673-46ac-925f-f2c3b6c494c7
பிளாஸ்டிக் போத்தல்கள் மட்டும் 4 டன் இருந்ததாக சென்னை மாநகராட்சி கூறியது. - படம்: தமிழக ஊடகம்

சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை விமானங்களின் பிரம்மாண்ட சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.

வானில் போர் விமானங்கள் நிகழ்த்திய வர்ணஜாலத்தை லட்சக்கணக்கான மக்கள் வியப்புடன் கண்டுகளித்தனர். இந்த சாகச நிகழ்ச்சியை முன்னிட்டு, 6 ஆயிரத்து 500 காவல்துறையினரும் 1,500 ஊர்க்காவல் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இதற்கிடையே, விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்ற மெரினா கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் மட்டும் 18.5 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

அகற்றப்பட்ட குப்பைகளில் பிளாஸ்டிக் போத்தல்கள் மட்டும் 4 டன் இருந்துள்ளது.

மண்ணில் புதையுண்ட சிறு குப்பைகளை அகற்ற 30க்கும் மேற்பட்ட குப்பை அள்ளும் வாகனங்கள் பயன்படுத்தப்பட்டதாக மாநகராட்சி கூறியது.

குறிப்புச் சொற்கள்