சென்னை: சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் ரயில்மூலம் ஒடிசா மாநிலத்திலிருந்து சனிக்கிழமை (ஜூன் 21) சென்னைக்குக்
கஞ்சா கடத்தி வரப்படுவதாக ரயில்வே காவல்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
தகவலின் அடிப்படையில் ரயிலில் சோதனை செய்த அதிகாரிகள் பையில் மறைத்துக் கொண்டுவரப்பட்ட 19 கிலோ எடைகொண்ட கஞ்சா மூட்டைகளைப் பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு 9.50 லட்ச ரூபாய் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
மேலும், கஞ்சா மூட்டைகளைக் கடத்தி வந்த ஒடிசாவைச் சேர்ந்த இளைஞரையும் அதிகாரிகள் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இளைஞர் பின்னர் மாநிலக் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

