கன்னியாகுமரி கண்ணாடிப் பாலத்தைப் பார்வையிட்ட 28 லட்சம் பேர்

1 mins read
2478dd28-cfa7-4cce-9320-2a834a7e8d16
ரூ.37 கோடி செலவில் இந்தக் கண்ணாடிப் பாலம் அமைக்கப்பட்டது. - படம்: travel crafters

குமரி: கன்னியாகுமரியில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடிப் பாலத்தை ஒரே ஆண்டில் 28 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர்.

கன்னியாகுமரி கடல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் நினைவு மண்டபம் ஆகியவற்றுக்கு இடையே ரூ.37 கோடியில் கண்ணாடிப் பாலம் அமைக்கப்பட்டது.

கடந்த 2024ஆம் ஆண்டு டிசம்பரில் முதல்வர் ஸ்டாலின் இப்பாலத்தை திறந்து வைத்தார். இதையடுத்து இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட்ட பிறகு, அங்கு அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி இழைப்பாலம் வழியாக நடந்து சென்று திருவள்ளுவர் சிலையை கண்டு மகிழ்கின்றனர்.

இந்நிலையில், 2025ஆம் ஆண்டு 28.5 லட்சம் பேர் கண்ணாடிப் பாலத்தை பார்வையிட்டுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்