எலி மருந்தால் இரு குழந்தைகள் உயிரிழப்பு: பூச்சிக்கொல்லி நிறுவனத்துக்கு ‘சீல்’

1 mins read
b708b5b7-a676-498e-8a0c-3407a15bf2a7
பூச்சிக்கொல்லி மருந்​திலிருந்து பரவிய நெடி​யால் குடும்பத்தினர் அனைவருக்​கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்​டுள்​ளது. - படம்: தமிழக ஊடகம்

சென்னை: சென்னை அருகே குன்​றத்தூரை அடுத்த மணஞ்சேரி, தேவேந்திரன் நகர் பகுதி​யைச் சேர்ந்​தவர் கிரிதரன் (34). இவர், மனைவி பவித்ரா (30), மகள் வைஷாலினி (6), மகன் சாய் சுந்​தரேசன் (1) ஆகியோ​ருடன் வசித்து வந்தார். கிரிதரன் குன்​றத்​தூரில் உள்ள தனியார் வங்கி​யில் மேலா​ளராகப் பணிபுரிந்து வருகிறார்.

குழந்தை வைஷாலினி, அதே பகுதி​யில் உள்ள தனியார் பள்ளி​யில் யுகேஜி படித்து வந்தார். வீட்​டில் எலி தொந்​தரவு அதிகமாக இருந்​த​தால், எலிகளைக் கட்டுப்​படுத்துவதற்காகச் சென்னை தியாகராய நகரில் செயல்​பட்டு வரும் பூச்​சிக்கொல்லி நிறு​வனத்தைத் தொடர்புகொண்டு விவரத்தைத் தெரி​வித்​துள்ளார் கிரிதரன்.

அண்மை​யில் அவரது வீட்டுக்கு வந்த இருவர் வீட்​டில் ஆங்காங்கே எலி மருந்தைத் தெளித்து​விட்டு, வீடு முழு​வதும் எலிகள் வராமல் இருக்க மருந்து அடித்​துள்ளனர். மருந்​திலிருந்து பரவிய நெடி​யால் அனைவருக்​கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்​டுள்​ளது. இரண்டு குழந்தை​களும் மருத்​துவ​மனைக்குச் செல்​லும் வழியிலேயே உயிரிழந்தனர். பெற்​றோர் போரூரில் உள்ள ஸ்ரீராமச்​சந்​திரா மருத்​துவ​மனையில் சிகிச்சை பெற்று வருகின்​றனர்.

இந்தச் சம்பவம் தமிழகம் முழு​வதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்​தியதைத் தொடர்ந்து, வேளாண்​துறை அதிகாரிகள் விதி​முறை மீறி செயல்​பட்​ட​தால், அந்த தனியார் நிறு​வனத்​தின் உரிமத்தைத் தற்​காலிகமாக ரத்து செய்​தனர். தொடர்ந்து, சனிக்கிழமை அந்​நிறு​வனத்த்தை மூடி முத்திரை வைத்தனர்.

குறிப்புச் சொற்கள்
சென்னைஎலிகுழந்தை