தேர்தல் பணியிலிருந்து விலக்கு கேட்டு 2,000 அரசு ஊழியர்கள் விண்ணப்பம்

தேர்தல் பணியிலிருந்து விலக்கு கேட்டு 2,000 அரசு ஊழியர்கள் விண்ணப்பம்

1 mins read
f210fb45-f42c-4ef8-8b41-74a3a77f621c
மருத்துவ சான்றிதழ்களுடன் அரசு ஊழியர்கள் விலக்கு வேண்டி மனு கொடுத்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. - படம்: கோயம்பத்தூர்ஜங்ஷன்.இன்

கோயம்பத்தூர்: தமிழகத்தின் இரண்டாவது ஆகப் பெரிய நகரமான கோயம்பத்தூரில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளில் மொத்தம் 3,563 வாக்குச்சாவடிகள் உள்ளன.

ஒரு வாக்குச்சாவடிக்கு நால்வர் வீதம் மொத்தம் 14,252 பேர் தேர்தலை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட வேண்டும். அப்பணியில் ஈடுபடுத்தப்படும் அரசுப் பணியாளர்களில் பெரும்பாலானோர் கோயம்பத்தூர் மாவட்டத்திலிருந்தும் கணிசமானோர் மற்ற மாவட்டங்களிலிருந்தும் தருவிக்கப்படுவர்.

அப்பொறுப்பு முழுவதும் கோவை மாவட்ட ஆட்சியரையே சேரும்.

ஆனால், நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அரசு ஊழியர்களைப் பணியமர்த்துவதில் அம்மாவட்ட ஆட்சியர் பெரும் சிக்கலை எதிர்கொள்வார் எனக் கூறப்படுகிறது.

அம்மாவட்டத்தில் மட்டும் தேர்தல் பணியிலிருந்து விலக்கு கேட்டு ஈராயிரம் அரசு ஊழியர்கள் விண்ணப்பித்திருக்கின்றனர்.

மருத்துவ சான்றிதழ்களுடன் அரசு ஊழியர்கள் விலக்கு வேண்டி மனு கொடுத்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் பணியில் இருக்கும் கடுமையான வேலைப்பளு அதற்கு முக்கியமான காரணமாகச் சொல்லப்படுகிறது.

ஏனெனில் தேர்தல் நாளில் விடியற்காலை 5 மணிக்கே வாக்குச்சாவடிக்குச் செல்லவது, வாக்குப்பதிவு முடிந்ததும் இயந்திரங்களை மூடி முத்திரையிடுவது, வட்டார அலுவலகத்தில் அவற்றை ஒப்படைப்பது போன்ற பணிகளில் அவர்கள் ஈடுபட வேண்டும்.

இடைவிடாத 20 மணிநேர வேலை என்பதால் அரசு ஊழியர்கள் பலர் அப்பணியில் ஈடுபட தயக்கம் காட்டுவதாகக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்