தமிழகத்தில் 6 மாதங்களில் 2,000 மெகாவாட் நீர் மின்சார உற்பத்தி சாதனை

தமிழகத்தில் 6 மாதங்களில் 2,000 மெகாவாட் நீர் மின்சார உற்பத்தி சாதனை

1 mins read
272447cc-b98d-4653-994c-6c739fec5586
பெரும்பாலான அணைகளில் போதுமான அளவுக்கு நீர் இருப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. - படம்: ஊடகம்

சென்னை: அணைகளில் உள்ள நீர் மட்டத்தைப் பொறுத்து நீர்மின் உற்பத்தி மேற்கொள்ளப்படுவதாக தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழக உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாண்டில் கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை 2,009 மெகாவாட் அளவுக்கு நீர் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், 50% மின்னுற்பத்தி இலக்கை எட்டியுள்ளோம். தென்மேற்கு பருவமழை நன்றாக பெய்ததால் இந்த இலக்கை எட்ட முடிந்தது.

குந்தா, காடம்பாறை, திருநெல்வேலி, ஈரோடு ஆகிய 4 முக்கிய மின்னுற்பத்தி வட்டங்களில் 2,321.90 மெகாவாட் மின்னுற்பத்தி திறன் நிறுவப்பட்டுள்ளது.

விரைவில் தொடங்க உள்ள வடகிழக்குப் பருவமழையும் அதிக அளவு பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதால், இலக்கையும் தாண்டி நீர் மின்னுற்பத்தி அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்