தமிழ்நாட்டில் 2 லட்சம் பள்ளிக் குழந்தைகளுக்கு பார்வை குறைபாடு

1 mins read
7f5a85d8-f648-4109-8481-7febd04dbe13
மா.சுப்பிரமணியன். - படம்: ஊடகம்

சென்னை: தமிழகத்தில் இரண்டு லட்சம் பள்ளிக் குழந்தைகளுக்குப் பார்வை குறைபாடு இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கண்புரை 82%, விழித்திரை பாதிப்பு 5.6%, நீரிழிவு நோய் விழித்திரை பாதிப்பு 1% கண் நீரழுத்த நோய் பாதிப்பு 1.3% மற்றவை 10.1% பாதிப்பு இருப்பதாக அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசும்போது குறிப்பிட்டார்.

“14.3% பேருக்கு குறைபாடுகள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு கண் கண்ணாடி மூலம் பார்வையை சரி செய்ய வாய்ப்பு உள்ளதாக கணக்கிடப்பட்டு உள்ளது.

“தமிழ்நாட்டில் இந்த ஆண்டு இதுவரையில் 27 லட்சத்து 90 ஆயிரத்து 93 பள்ளி குழந்தைகளுக்கு கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

“இதில் 2 லட்சத்து 214 குழந்தைகளுக்கு பார்வை குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

“மீதமுள்ள பள்ளிக் குழந்தைகளுக்கும் பரிசோதனை செய்து, இந்த ஆண்டு இறுதிக்குள் 3 லட்சம் பள்ளி சிறார்களுக்கு இலவச கண் கண்ணாடி வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,” என்றார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

குறிப்புச் சொற்கள்