சென்னை: தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களிலும் கொவிட்-19 தினசரி பாதிப்பு 300க்கும் கீழ் குறைந்துள்ளது. அதிலும் எட்டு மாவட்டங்களில் மட்டுமே மூன்று இலக்க எண்களில் இந்தப் பாதிப்பு பதிவாகியுள்ளது. 22 மாவட்டங்களில் 50க்கும் குறைவான மக்களே பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
"மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,652 பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று உறுதியாகியுள்ளது.
"கோவையில் தினசரி பாதிப்பு 290 ஆகவும் சென்னையில் 165 பேராகவும் குறைந்துள்ளது.
"கிருமித்தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் ஒரே நாளில் 3,104 பேர் குணமடைந்து, வீடு திரும்பினர்.
"கடந்த 24 மணி நேரத்தில் 36 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்ததை அடுத்து, தமிழகத்தில் பலி எண்ணிக்கை 33,454 ஆக உயர்ந்துள்ளது. ஆனால், தமிழகத்தின் 20 மாவட்டங்களில் எந்த உயிரிழப்பும் பதிவாகவில்லை.
"மாநிலம் முழுவதும் 31,819 பேர் கிருமி பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் இதுவரை தமிழகத் தில் 3,929 பேர் கறுப்புப் பூஞ்சைத் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ள னர்," என்றும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

