திருச்சிராப்பள்ளி: விமானப் பயணி ஒருவரின் பயணப்பெட்டியிலிருந்து உயிருடன் 2,447 ஆமைகளை திருச்சி விமான நிலையச் சுங்கத்துறை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமையன்று (டிசம்பர் 29) கைப்பற்றினர்.
பயணி ஒருவர் ஆமைகளைக் கடத்தி வருவதாகத் தங்களுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது என்றும் அதன் அடிப்படையில் அப்பயணியின் பயணப் பெட்டியைச் சோதித்தபோது, அவர் ஆமைகளைக் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது என்றும் சுங்கத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
“அப்பயணி டிசம்பர் 29 ஞாயிற்றுக்கிழமையன்று பத்திக் விமானம் OD221 மூலமாகக் கோலாலம்பூரிலிருந்து திருச்சியை வந்தடைந்தார். ஆமைகளைக் கடத்தி வந்தது தொடர்பில் விசாரணை நடந்து வருகிறது,” என்று எக்ஸ் ஊடகப் பதிவு வழியாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.