தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தமிழகத்தில் 2,642 மருத்துவர் பணியிடங்கள் நிரப்பப்படும்: மா.சுப்பிரமணியன்

1 mins read
cc2793ac-50b1-4560-be10-033e23cd2358
மா.சுப்பிரமணியன். - படம்: ஊடகம்

சென்னை: தமிழகத்தில் 2,642 மருத்துவர்கள் விரைவில் நியமிக்கப்பட இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை அன்று மருத்துவ முகாம் ஒன்றைத் தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 2,553 மருத்துவப் பணியிடங்களுக்கு தேர்வு நடை பெற்றதாகவும் அதில் 24,000 மருத்துவர்கள் பங்கேற்றதாகவும் குறிப்பிட்டார்.

“தற்போது கூடுதலாக 80 பணியிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. எனவே, 2,642 மருத்துவப் பணியிடங்கள் நிரப்பப்படும். இதற்காக 4,585 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு பழக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின்படி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும்,” என்றார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

எதிர்வரும் 20ஆம் தேதியன்று கலந்தாய்வு நடத்தப்பட்டு பணி நியமனம் வழங்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்