சட்டமன்றத் தேர்தல் தொடர்பான பாது​காப்புப் பணி​யில் 295 துணை ராணுவக் குழுக்கள்

சட்டமன்றத் தேர்தல் தொடர்பான பாது​காப்புப் பணி​யில் 295 துணை ராணுவக் குழுக்கள்

1 mins read
54e9f04c-a0d1-42e5-b335-4cc90741c823
இதுவரை 115 துணை ராணுவக் குழுக்கள் தமிழகம் வந்​துவிட்டதாகவும் மீதமுள்ள வீரர்​களும் தமிழகத்​துக்கு வந்தவண்​ணம் உள்​ளனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். - கோப்புப்படம்: இந்தியா டுடே

சென்னை: தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் தொடர்பான பாது​காப்புப் பணி​யில் 295 துணை ராணுவக் குழுக்கள் (ஏறக்குறைய 40 ஆயிரம் பேர்) ஈடுபட இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதுவரை 115 குழுக்கள் தமிழகம் வந்​துவிட்டதாகவும் மீதமுள்ள வீரர்​களும் தமிழகத்​துக்கு வந்தவண்​ணம் உள்​ளனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனிடையே, பாது​காப்புப் பணி​களில் 1.40 லட்​சம் காவல்துறையினர் ஊர்க்​காவல் படை​யினர், முன்​னாள் ராணுவத்​தினர் ஆகியோர் ஈடுபடுத்தப்படுவர் என தமிழக காவல்துறை கூறியுள்ளது.

தமிழகத்தில் தேர்​தல் கால செலவுகளுக்​காக ரூ.1,032 கோடி ஒதுக்​கப்​பட்​டுள்​ள நிலையில், மாநிலம் முழுவதும் தேடப்​படும் குற்​ற​வாளி​களில் இது​வரை 2,650 பேர் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர்.

சட்டமன்றத் தேர்​தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23ஆம் தேதி நடை​பெற உள்​ளது. 3,579 ஆண்​கள், 443 பெண்​கள் களத்​தில் உள்​ளனர். 5.73 கோடி பேர் வாக்​களிக்கத் தகுதி பெற்​றுள்​ளனர். வாக்​குச்​சாவடிகளின் எண்​ணிக்கை 75,064ஆக உயர்ந்​துள்​ளது. இதில் 5,938 வாக்​குச்​சாவடிகள் பதற்​ற​மானவை என அடையாளம் காணப்பட்டுள்ளன.

தேர்​தல் பணி​யில் 3.40 லட்​சம் அரசு ஊழியர்​கள் ஈடு​படுத்​தப்பட உள்​ளனர். இவர்​களில் அஞ்சல் வாக்கு செலுத்த 1.50 லட்​சம் பேர் விண்​ணப்​பித்​துள்​ளனர்.

குறிப்புச் சொற்கள்