தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

குற்றச்செயல்களைத் தடுக்க 65,000 இடங்களில் 3.2 லட்சம் கண்காணிப்புக் கேமராக்கள்: காவல்துறை நடவடிக்கை

1 mins read
72f07dbf-d6f9-416b-98a0-fc56c920bb7a
820 காவல் நிலையங்களில் நிறுவப்பட்டுள்ள கண்காணிப்புக் கருவிகளில், 18 மாதங்கள் வரை காட்சிகளைப் பதிவு செய்து வைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. - கோப்புப்படம்: ஊடகம்

சென்னை: தமிழகத்தில் குற்றச்செயல்களைத் தடுக்கும் விதமாக, மாநிலம் முழுவதும் ஏறக்குறைய 65 ஆயிரம் இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இவை அனைத்துமே குற்றச்செயல்கள் நடக்கும் இடங்கள் என காவல்துறையால் அடையாளம் காணப்பட்டவை.

தமிழகத்தில் குற்றச்செயல்களைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஓர் அங்கமாக, காவல்துறையின் கண்காணிப்புப் பணி தீவிரமடைந்துள்ளது. 1,300க்கும் மேற்பட்ட காவல் நிலைய எல்லைகளில், பாதுகாப்பு குறைபாடு உள்ள பகுதிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

குறைபாடு உள்ள இடங்களில் காவலர்களின் சுற்றுக்காவல் பணி தீவிரப்படுத்தப்பட்டு, சோதனைச்சாவடிகளும் அமைக்கப்பட்டிருந்தன. காவல்துறையின் எச்சரிக்கைப் பலகையும் பல இடங்களில் காணப்படுகிறது.

“மேலும், 820 காவல் நிலையங்களில் நிறுவப்பட்டுள்ள கண்காணிப்புக் கருவிகளில், 18 மாதங்கள் வரை காட்சிகளைப் பதிவு செய்து வைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

“குற்றச்செயல் நடக்க வாய்ப்பு உள்ளதாகக் கருதப்படும் 65,000 இடங்களில் 3.2 லட்சம் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்படும்,” என காவல்துறை வட்டாரங்களை மேற்கோள் காட்டி தமிழக ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்