தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சென்னையில் 3 நாள்கள் விநாயகர் சிலைகள் ஊர்வலம்

1 mins read
4a240432-7f7e-42b6-ab5e-339399af14a0
விநாயகர் சிலைகள். - படம்: ஊடகம்

சென்னை: சென்னையில் 3 நாள்கள் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்ல போலிசார் அனுமதி வழங்கி உள்ளனர்.

நாடுமுழுவதும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை வருகிற 7ஆம் தேதி (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. சென்னையில் இந்து அமைப்புக்கள் சார்பில் 1,500 பெரிய விநாயகர் சிலைகள் நிறுவப்பட உள்ளன. பொது இடங்களில் சிலைகள் வைப்பது தொடர்பான கட்டுப்பாடுகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை போலிசார் வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில், சென்னையில் 11, 14 மற்றும் 15 ஆகிய 3 தேதிகளில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடத்துவதற்கு போலிசார் அனுமதி வழங்கி உள்ளனர். இதில் 15ஆம் தேதியன்று பிரம்மாண்ட ஊர்வலம் நடைபெற உள்ளது. விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்ல 17 வழித்தடங்கள் பிரத்யேகமாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், நீலாங்கரை பல்கலைநகர், காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர் பாப்புலர் எடை மேடை ஆகிய 4 கடற்கரைப் பகுதிகளில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு போலிசார் அனுமதி வழங்கி உள்ளனர். விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது பாதுகாப்புப் பணியில் 16,500 போலிசார் ஈடுபட உள்ளனர்.

குறிப்புச் சொற்கள்