மதுரையில் வெடிகுண்டு மிரட்டல்: 3 பள்ளிகளுக்கு விடுப்பு

மதுரையில் வெடிகுண்டு மிரட்டல்: 3 பள்ளிகளுக்கு விடுப்பு

1 mins read
f6e80f53-fed7-4855-b6db-dcd1031b0cee
பள்ளி வளாகத்தில் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்கள் உதவியுடன் சோதனை நடத்தப்பட்டது. - படம்: தமிழக ஊடகம்

மதுரை: மதுரையில் 3 பிரபலப் பள்ளிகளுக்கு திங்கட்கிழமை (செப்டம்பர் 30) வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறையினர் நடத்திய சோதனையில் அது புரளி எனத் தெரியவந்தது. வெடிகுண்டு மிரட்டல் காரணமாக, 3 பள்ளிகளுக்கு விடுப்பு கொடுக்கப்பட்டது.

மதுரை நரிமேடு பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கும், அனுப்பானடி பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கும், பொன்மேனி பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கும் திங்கட்கிழமை (செப்டம்பர் 30) மின்னஞ்சல் வாயிலாக அந்த மிரட்டல் விடுக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து, அந்த 3 பள்ளி நிர்வாகங்களும் காவல்துறையில் புகார் செய்தன. பள்ளி வளாகத்தில் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்கள் உதவியுடன் சோதனை நடத்தப்பட்டது.

ஆனால் சந்தேகத்துக்குரிய எந்தப் பொருள்களும் கிடைக்கவில்லை. அதனால் மிரட்டல் வெறும் புரளி என உறுதிசெய்யப்பட்டது.

இருந்தாலும் அந்த 3 பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் உட்பட யாரும் செல்லவேண்டாம் என்று பள்ளி நிர்வாகத்தினர் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில், மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்