சென்னை: தமிழகத்தில் குழந்தைத் திருமணம் குறித்து 2023ல் மட்டும் 3,000 புகார்கள் வந்துள்ளன. 1,995 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு உள்ளன என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வாயிலாக தெரியவந்துள்ளது.
1,054 குழந்தை திருமணங்கள் நடந்துள்ளன.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு செய்யப்பட்டபோதும், 808 முதல் தகவல் அறிக்கைகள் (எஃப்ஐஆர்) மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் பெரும்பாலானவை ஏற்கெனவே நடந்த திருமணங்கள் என்று தகவல் அறியும் சட்டத்தின்கீழ் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு செய்யப்பட்டபோதும் 808 எஃப்ஐஆர் (FIR) மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன.
அதிக புகார்கள் வந்த முதல் ஐந்து மாவட்டங்களாக, நாமக்கல் (171) , கடலூர் (150), சேலம் (143), திண்டுக்கல் (175), தேனி (161) ஆகியவை உள்ளன.
குழந்தை திருமணங்கள் நடந்த முதல் ஐந்து மாவட்டங்களாக, நாமக்கல் (117) ஈரோடு (62), கடலூர் (56), திண்டுக்கல் (54) கோவை (46) ஆகியவை உள்ளன.