வால்பாறையில் பேருந்து கவிழ்ந்ததில் 40 பேர் காயம்

1 mins read
2093271f-d6c2-4973-96d5-a2234fe1a90c
வால்பாறையில் அரசுப் பேருந்து 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. - படம்: தமிழக ஊடகம்
multi-img1 of 2

கோயம்புத்தூர்: கோவை மாவட்டம், வால்பாறையில் அதிகாலை 3 மணி அளவில் அரசுப் பேருந்து ஒன்று 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 40 பேருக்கு மேல் காயம் அடைந்தனர்.

திருப்பூர் பகுதியிலிருந்து 72 பயணிகளை ஏற்றிக்கொண்டு வால்பாறை அருகே உள்ள கவர்கள் எஸ்டேட் பகுதியின் 33வது கொண்டை ஊசி வளைவில் பேருந்து கவிழ்ந்து விழுந்தது.

தகவலறிந்து வந்த வால்பாறை காவல்துறையினர் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் அனைவரையும் மீட்டு வால்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அவர்களில் பலத்த காயமடைந்த ஓட்டுநர் கணேசன், 49, பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து குறித்து வால்பாறை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்