சென்னை: தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் 4,000 ஏரிகள் நிரம்பி வழிகின்றன.
2,926 ஏரிகளில் 76% முதல் 99% வரை நீர் இருப்பு உள்ளது.
மாநிலம் முழுவதும் உள்ள 90 அணைகள், நீர்த்தேக்கங்களில் 82 விழுக்காடு நீர் இருப்பு உள்ளதாக நீர்வளத் துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் மொத்தம் 14,140 பாசன ஏரிகள் உள்ளன. கன்னியாகுமரி மாவட்டத்தில் 2,040, சிவகங்கை மாவட்டத்தில் 1,459, மதுரையில் 1,340 ஏரிகள் உள்ளன.

