சென்னை: தமிழகத்தைச் சேர்ந்த ஐந்து கோடி ரூபாய் மதிப்புள்ள பழமை வாய்ந்த சிலை அமெரிக்காவில் இருந்து மீட்கப்பட்டு, விமானம் மூலம் சென்னை வந்தடைந்தது.
தமிழகத்தில் இருந்து ஏராளமான சிலைகள் வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டுள்ளன.
அவற்றை மீட்கவும் சிலைகள் கடத்தப்படுவதைத் தடுக்கவும் தமிழக காவல்துறையில் தனிப்பிரிவே உருவாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் இருந்து சில ஆண்டுகளுக்கு முன்பு கடத்தப்பட்ட கலியமா்த்தன கிருஷ்ணர் சிலை அமெரிக்காவில் இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து, அச்சிலையை மீட்பதற்கான நடவடிக்கைகளை தமிழக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்டனர்.
அதன் பலனாக, அச்சிலை மீட்கப்பட்டது என்றும் அதன் மதிப்பு ரூ.5 கோடி என்று அரசு அதிகாரிகள் தெரிவித்தனர் என்றும் தமிழக ஊடகச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே, இந்தச் சிலை தற்போது விமானம் மூலம் சென்னை வந்தடைந்துள்ளது.