காரைக்கால்: காரைக்கால், பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லூரி, ஆராய்ச்சி நிலையத்தில் இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் 40 மாணவ, மாணவியர் வேளாண் பயிற்சியின் ஓர் அங்கமாக 500க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் ரகங்களைப் பயிரிட்டு, பாதுகாத்து சாதனை செய்த வடக்கு வரிச்சிக்குடி கிராம இயற்கை விவசாயி பாஸ்கரின் வயலுக்குச் சென்று பயிற்சி பெற்றனர். கருப்புக்கவுனி, மாப்பிள்ளை சம்பா, பூங்கார், கருங்குறுவை, பால்குடை வாழை, ஒட்டடை யான், காட்டு யானம் போன்றவை குறித்து மாணவர்களுக்கு பாஸ்கரன் விளக்கினார்.
500 பாரம்பரிய நெல் ரகங்கள் பயிரிட்டு விவசாயி சாதனை
1 mins read

