5,938 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை

5,938 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை

1 mins read
ff5db0f2-36a2-47ef-9cd3-4593501038f9
105 தொகுதிகளில் நிர்ணயிக்கப்பட்டுள்ள வரம்பைக் காட்டிலும் கூடுதலாக வேட்பாளர்கள் செலவு செய்துள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. - படம்: தினமணி

சென்னை: தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் 5,938 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாகக் கண்டறியப்பட்டுள்ளன.

அத்தகைய வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மத்திய சிறப்பு தேர்தல் பார்வையாளர் பிரதாப் சிங் கூறியுள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், “வாக்குப்பதிவை சுமுகமாக நடத்தும் வகையில் அரசியல் கட்சிப் பிரமுகர்களிடம் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. 105 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ள வரம்பைக் காட்டிலும் கூடுதலாக வேட்பாளர்கள் செலவு செய்துள்ளனர்.

சென்னை மாவட்ட எல்லைப் பகுதியில் கண்காணிப்பு, பாதுகாப்பைப் பலப்படுத்த மாவட்டத் தேர்தல் அலுவலர் கோரியுள்ளார். அதனால் கூடுதலாக துணை ராணுவப் படையினர் சென்னை மாவட்ட எல்லையில் நிறுத்தப்படுவர்.

“கைப்பேசிச் செயலிகள் மூலம் பணப் பட்டுவாடா செய்யப்படுவதைத் தடுக்க வருமான வரித்துறையினருடன் இணைந்து கண்காணிக்கப்படுகிறது,” என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்
தேர்தல் ஆணையம்வாக்குச்சாவடிதொகுதி

தொடர்புடைய செய்திகள்