தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மரத்தை வெட்டினால் 6 மாதச் சிறைத் தண்டனை - சீமான்

2 mins read
e9f3477a-dfc0-4a43-85b5-b0d598ef2b2c
நாம் தமிழர் கட்சி சார்பில் திருத்தணியில் மரங்களைக் காப்பதற்காக சனிக்கிழமை ‘மரங்களின் மாநாடு’ நடைபெற்றது. அந்த மாநாட்டில் மரங்களின் முக்கியத்துவம் பற்றி பேசினார் அந்தக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். - படம்: ஊடகம்

திருத்தணி: நாம் தமிழர் கட்சியின் சார்பில் திருத்தணியில் கடந்த சனிக்கிழமை மரங்களைக் காக்க ‘மரங்களின் மாநாடு’ என்ற பெயரில் மாநாடு நடைபெற்றது.

அந்த மாநாட்டில் உரையாற்றிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால், மரத்தை வெட்டுவோருக்கு ஆறு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

அருங்​குளம் பகு​தி​யில் உள்ள மனிதநேய தோட்​டத்​தில் சனிக்கிழமை மரங்​களுக்கு இடை​யில் ‘மரங்​களின் மாநாடு’ எனும் தலைப்​பில் நிகழ்ச்சி நடை​பெற்​றது.

இதில் 500க்​கும் மேற்​பட்​டோர் பங்​கேற்​றனர். அவர்​களுக்கு மரக்​கன்​றுகள் வழங்​கப்​பட்​டன. அந்த ​மா​நாட்​டில் திரு​வள்​ளூர், திருத்​தணி ஆகிய தொகு​தி​களில் போட்​டி​யிடும் நாதக வேட்​பாளர்​களை திரு. சீமான் அறி​வித்​தார்.

அப்​போது பேசி​ய​ திரு சீமான், “இது மரங்​களுக்​கான மாநாடு என்று சொல்​வதை விட உயிர் காற்றை தரு​கிற தாய்க்கு நன்றி சொல்​லும் மாநாடு என்​று​தான் கூற வேண்​டும். இந்தக் காட்​டில் புலிகள் நுழைந்​ததும், ஒரு அணில் கூடக் கண்ணில்படவில்லை, அணில்​களுக்​கும் சேர்த்து தான் காடு வளர்க்க நாங்​கள் போராடு​கிறோம். வாக்​குக்​காக இருப்​பவர்​கள் இது​போன்ற மாநாட்டை நடத்​த​மாட்​டார்​கள்.

காடு​களை அழித்து விரை​வுச் சாலைகள் அமைத்த மத்திய, மாநில அரசுகள், தூய காற்​றுக்கு ரூ.4,500 கோடி ஒதுக்​கி​யுள்​ளனர். மரம் நடு​வோம் மழை பெறு​வோம் என்று சொல்​வார்​களே தவிர, எது​வும் செய்ய மாட்​டார்​கள். ஒரு மரம் கூட நடமாட்​டார்​கள்.

நாம் மரம் வளர்க்க வேண்​டும், அதை எப்​படிப் பராமரிக்க வேண்​டும் என்று யோசிப்​போம். நாதக ஆட்​சிக்கு வந்​தால் மரத்தை வெட்​டி​னால் ஆறு மாதம் சிறைத் தண்​டனை வி​திக்​கப்​படும்,” என்று கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்