பெரம்பலுார்: மருத்துவம் படிக்காமல் கடந்த மூன்று ஆண்டுகளாக மருந்தகம் நடத்தி வந்த போலி பெண் மருத்துவர் கைதானார்.
பெரம்பலூரைச் சேர்ந்தவர் முத்துலட்சுமி. 62 வயதான இவர், பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார்.
இந்நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளாகப் பெரம்பலுாரின் இரூர் முக்கிய சாலையில் உள்ள வீட்டிலிருந்து அவர் பலருக்குச் சிகிச்சை அளித்து வருவதாக மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் அலுவலகத்துக்குப் புகார்கள் வந்தன.
இதையடுத்து, மருத்துவக் குழுவினர் அந்த வீட்டுக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, அந்த வீட்டில் மூதாட்டி ஒருவர் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தார்.
விசாரணையில், அவர் மருத்துவம் படிக்கவில்லை என்பது உறுதியானது. இதையடுத்து அவர் கைதானார்.

