இரண்டாவது முதலீட்டாளர்கள் மாநாட்டில் 78 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து

இரண்டாவது முதலீட்டாளர்கள் மாநாட்டில் 78 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து

படம்: தினத்தந்தி

25 Nov 2026 - 9:58 pm

1 mins read

சென்னை: தமிழக அரசு நடத்திய இரண்டாவது முதலீட்டாளர்கள் மாநாட்டில், பல்வேறு தொழில்துறைகளுடன் 78 புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

சென்னை கோவளம் பகுதியில் நடைபெற்ற மாநாட்டின்போது, முதல்வர் விஜய் முன்னிலையில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு, வர்த்தகத்துறை சார்பில் இந்த ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இதன்மூலம் தமிழகத்துக்கு 58,214 கோடி ரூபாய் அளவிலான புதிய முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. மேலும், இந்தத் திட்டங்கள் முழுமையாகச் செயல்படுத்தப்படும்போது 65,786 பேருக்கு நேரடி, மறைமுக வேலைவாய்ப்புகள் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநாட்டின் ஒரு பகுதியாக, புதிய தொழில் திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா, நிறைவுற்ற திட்டங்களின் தொடக்க விழாவும் நடைபெற்றன.

7,925 கோடி ரூபாய் முதலீட்டில் 19,965 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 15 திட்டங்களுக்கு முதல்வர் விஜய் அடிக்கல் நாட்டினார்.

1,430 கோடி ரூபாய் முதலீட்டில் 1,710 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் 6 திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டன.

ஐந்து முன்னணி நிறுவனங்களில் பல்வேறு பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்பட்ட 18 பேருக்குப் பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

ஆட்சிப் பொறுப்பேற்ற கடந்த 200 நாட்களில், முந்தைய ஒப்பந்தங்கள், இரண்டாவது மாநாட்டு ஒப்பந்தங்கள் ஆகியவற்றின் வாயிலாக மொத்தம் 190 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 1.73 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக மாநாட்டில் சுட்டிக்காட்டப்பட்டது.

இதன் மூலம் மொத்தம் 1,98,557 பேருக்கு வேலைவாய்ப்புகள் உறுதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்