தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல் மாற்று உறுப்புகளுக்காக 7,936 பேர் காத்திருப்பு

2 mins read
2a4419b2-b534-4cf6-a24b-6fdb16d0eb1b
கோப்புப் படம் - பிக்சாபே

சென்னை: தமிழகத்தில் 7,400 பேர் சிறுநீரகம், 475 பேர் கல்லீரல், 61 பேர் நுரையீல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்வதற்காகக் காத்திருப்பதாக உடல் உறுப்பு தான ஆணைய உறுப்பினர் செயலர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

உடல் உறுப்புகளைத் தானம் செய்வது குறித்து மக்கள் மத்தியில் தற்போது அதிக அளவில் விழிப்புணர்வு இருந்தாலும், வரும்முன் காத்துக் கொள்வது என்பது மிகவும் அவசியமான ஒன்று.

வாழ்வியல் மாற்றங்கள், சரியான உணவுப் பழக்கவழக்கம், உடற்பயிற்சி என ஆரோக்கியத்துக்கு அனைத்து மக்களும் அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தி உள்ளார்.

மாநில அளவில் கடந்த 2024ல் 268 பேரிடமிருந்து 1,446 உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டு, 449 சிறுநீரகம், 201 கல்லீரல், 39 நுரையீரல், 91 இதயம் ஆகியவை உறுப்புகள் செயல் இழந்தவர்களுக்குப் பொருத்தப்பட்டுள்ளன என்று திரு கோபாலகிருஷ்ணன் கூறினார்.

“உடல் உறுப்புகள் செயலிழப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சிறுநீரகம், கல்லீரல் பாதிப்பு இதில் முன்னிலையில் உள்ளது.

“சிறுநீரகச் செயலிழப்புக்கு சர்க்கரை, ரத்த அழுத்தம், உடல் பருமன், பருவநிலை மாற்றம், காற்று மாசு, சுயமாக மருந்து எடுத்துக் கொள்ளுதல், வலி நிவாரணி மருந்துகளைத் தொடர்ந்து எடுத்துக் கொள்வது போன்றவை காரணங்கள்.

“அதேபோல், வைரஸ் நோய் பாதிப்பு, மது அருந்துவது, உடல் பருமன் போன்ற காரணங்களால் கல்லீரல் பாதிப்பு ஏற்படுகிறது,” என்றும் திரு கோபாலகிருஷ்ணன் மேலும் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்