சென்னை: தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில் 8,144 அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்றுள்ளனர்.
இவ்வாறு ஒரே நாளில் இத்தனை ஊழியர்கள் ஓய்வு பெறுவது இதுவே முதல் முறை என அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த காலங்களில், மே மாதம் அதிக எண்ணிக்கையிலான அரசு ஊழியர்கள் பணியில் சேர்ந்ததால் அவர்களில் பெரும்பாலானோர் மே 31ஆம் தேதி (சனிக்கிழமை) ஓய்வு பெற்றனர்.
தமிழகத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கல்வியாண்டு முடியும் போதுதான் பணி ஓய்வு பெறுவது வழக்கம். அதாவது, கல்வியாண்டு என்பது மே மாதம்தான் முடிவடையும். அந்த வகையில், மே 31ஆம் தேதி ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களில் பெரும்பாலானோர் ஆசிரியர்கள் ஆவர்.
தமிழகத்தில் தற்போது 9.42 லட்சம் அரசு ஊழியர்கள் உள்ளனர். ஏறக்குறைய 7.33 லட்சம் பேர் ஓய்வூதியம் பெறுகின்றனர். அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயது 60 ஆகும்.
லட்சக்கணக்கான இளையர்கள் வேலை வாய்ப்புக்காக காத்திருக்கின்றனர். எனினும், சில துறைகளில் ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு அரசாங்கம் மீண்டும் வேலை வாய்ப்பு அளிப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது.

