சென்னை: சென்னை அம்பத்தூர் அருகே 845 கிலோ கஞ்சா சிக்கி உள்ளது.
ஆந்திராவில் இருந்து கண்டெய்னரில் போதைப்பொருள் கடத்தி வந்தபோது அதனைப் போதைப்பொருள் தடுப்பு பிரிவு காவலர்கள் பறிமுதல் செய்தனா்.
சென்னையில் அண்டை மாநிலங்களில் இருந்து கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்களை கடத்தி வந்து பலரும் விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சென்னை அம்பத்தூர் அருகே அயப்பாக்கத்தில் மத்திய போதைப்பொருள்கள் தடுப்பு பிரிவினர் நடத்திய சோதனையில் சந்தேகத்திற்கு இடமான வகையில் சென்ற கண்டெய்னரை மடக்கி சோதனை செய்தனர். அப்போது அதில் கிலோ கணக்கில் கஞ்சா இருந்தது தெரிய வந்தது. ஒட்டுமொத்தமாக 845 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
அதன் மொத்த மதிப்பு ரூ.2.5 கோடி என காவலர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இதுகுறித்து போதைப்பொருள்கள் தடுப்பு பிரிவினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.