நிர்வாக காரணத்தால் சென்னையில் 9 விமானங்கள் ரத்து

1 mins read
76145bfb-b1c7-4f9b-8d27-eb37640e1273
சென்னை விமான நிலையம். - கோப்புப்படம்: ஊடகம்

நிர்வாக காரணங்களால் விமான சேவைகள் நேற்று ரத்து செய்யப்பட்டதாக சென்னை விமான நிறுவனங்கள் அறிவித்து உள்ளன.

சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் நேற்று ஒரே நாளில் 4 புறப்பாடு விமானங்கள், 5 வருகை விமானங்கள் ஆகிய 9 விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டு உள்ளன.

விமானங்கள் திடீர் ரத்தால் இந்த விமானங்களில் பயணிக்க முன்பதிவு செய்து இருந்த பயணிகள் அவதி அடைந்தனர்.

சென்னை விமான நிலையத்தில் அண்மைக்காலமாக இதைப்போல் நிர்வாக காரணங்கள் என்று கூறி, பயணிகள் விமானங்கள் அடிக்கடி ரத்து செய்யப்படும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன.

இதனால் சென்னை விமான நிலையத்தில் முன்பதிவு செய்துள்ள விமான பயணிகள், தாங்கள் பயணிக்க வேண்டிய விமானங்கள் இன்று இயக்கப்படுகிறதா? என்று அந்தந்த விமான நிறுவனங்களிடம் கேட்டுவிட்டு, அதன் பின்பு பயணம் செய்ய விமான நிலையம் வரவேண்டிய நிலை உள்ளது

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்