9 எலுமிச்சை பழங்கள் ரூ.1.43 லட்சத்துக்கு ஏலம்

9 எலுமிச்சை பழங்கள் ரூ.1.43 லட்சத்துக்கு ஏலம்

1 mins read
90f6a89a-1081-4f0b-abdf-2c427f9f5bfe
திருவெண்ணெய்நல்லூர் அடுத்த ஒட்டனந்தல் கிராமத்தில் முருகன் கோயில் வேலில் படைக்கப்பட்ட எலுமிச்சை பழம் ஏலம் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. - படம்: இந்து தமிழ் திசை
Google News Preferred Icon

விழுப்புரம்: பக்திப் பரவசத்தில் திளைத்த பக்தர்கள் சாமிக்குப் படைக்கப்பட்ட 9 எலுமிச்சை பழங்களை ரூ.1.43 லட்சத்துக்கு ஏலம் எடுத்தனர்.

இது விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அடுத்த ஒட்டனந்தல் கிராமத்தில் காணப்படும் இரட்டைக் குன்றின் மீது ரத்தினவேல் முருகன் கோவிலில் ஆண்டுதோறும் நிகழும் சம்பவம்தான்.

இக்கோவில் கருவறையில் வேல் மட்டுமே இருக்கும். இங்கு பங்குனி உத்திரத் திருவிழா கடந்த 1ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திரு​விழா உற்​சவத்​தில் வேலில் அன்றாடம் படைக்​கப்​படும் ஒன்பது எலுமிச்​சை பழங்கள், இடும்​பன் பூசையில் வைத்து ஏலம் விடும் நிகழ்வு அண்மையில் நடை​பெற்​றது. முதல் நாள் எலுமிச்சை பழம், ரூ.45,000க்கு ஏலம் போனது.

இதே​போல் மற்ற எட்டு பழங்​களும் ரூ.15 ஆயிரம், ரூ.16 ஆயிரத்​துக்கு ஏலம் போனது. இதன்​மூலம் 9 எலுமிச்சை பழங்​களை​யும் ரூ.1 லட்​சத்து 43 ஆயிரத்​துக்கு பக்​தர்​கள் ஏலம் எடுத்​தனர்.

இந்த எலுமிச்சை பழங்கள் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. குறிப்பாக, இப்பழங்களை உட்கொண்டால் குழந்தை வரம் கிட்டும், திரு​மணம் கைகூடும், குடும்ப பிரச்​சினை​கள் சரியா​கும் என்கின்றனர்.

கோவில் ஏலத்​தில் பல்​வேறு மாவட்​டங்​களில் இருந்​தும் பக்​தர்​கள் பங்​கேற்​றனர். எலுமிச்சை பழத்தை ஏலம் எடுத்​தவர்​கள், தங்​கள் உடலில் தண்​ணீரை ஊற்​றிக் கொண்டு பூசாரி முன்பு மண்​டி​யிட்டு எலுமிச்​சம் பழத்தை பெற்​றுக் கொண்​டனர்.

இடும்​பனுக்கு படைக்​கப்​பட்ட கரு​வாட்டுக் குழம்பு சாதம் பிர​சாத​மாக அனை​வருக்​கும் வழங்​கப்​பட்​டது.

குறிப்புச் சொற்கள்