கோவை: கடந்த ஓராண்டில் கோவை அரசு மருத்துவமனையில் 18 லட்சம் பேர் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்றுள்ளனர்.
கடந்த ஆண்டு 6,000 பிரசவங்கள் நடந்துள்ளன. இவற்றுள் 55 % பிரசவங்கள் அறுவை சிகிச்சை மூலம் மேற்கொள்ளப்பட்டதாக அம்மருத்துவமனையின் தலைவர் கீதாஞ்சலி தெரிவித்துள்ளார்.
கோவை அரசு மருத்துவமனையில் நாள்தோறும் உள்ளூர் மக்கள், கேரளா மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என ஏறக்குறைய 8,000 பேர் புறநோயாளிகளாக சிகிச்சை பெறுவதாகவும், 2,500 பேர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெறுவதாகவும் அவர் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு 5.71 லட்சம் பேர் இம்மருத்துவமனையில் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்றுள்ளனர்.
கடந்த ஆண்டு 20,000 பெரிய அறுவை சிகிச்சைகள், 70,000 சிறிய அளவிலான அறுவை சிகிச்சைகள், 6,000 பிரசவங்கள் நடந்துள்ளன.
இம்மருத்துவமனையின் மூலம் 120 பேர் உடல் தானம் செய்திருப்பதாகவும் ஏழு உடல் உறுப்பு தானம் பெறப்பட்டுள்ளதாகவும் தலைவர் கீதாஞ்சலி தெரிவித்துள்ளார்.

