போக்குவரத்து காவலர்களுக்கு ‘குளுகுளு’ தலைக்கவசம்

போக்குவரத்து காவலர்களுக்கு ‘குளுகுளு’ தலைக்கவசம்

1 of 2
படம்: ஊடகம்
படம்: ஊடகம்

04 Mar 2025 - 7:02 pm

1 mins read

சென்னை: சென்னையில் அதிகாலையில் காணப்பட்ட பனிமூட்டம் குறைந்து தற்போது வெயில் அடிக்க தொடங்கி உள்ளது. இனி வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படும்.

தமிழகத்தில் கோடை காலம் நெருங்கி வருவதற்கான அறிகுறியாக, பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.

கோடை காலத்தில் மற்ற அனைவரையும்விட, போக்குவரத்து காவல்துறையினரின் நிலைமைதான் திண்டாட்டமாக இருக்கும்.

வெயிலின் தாக்கத்தில் இருந்து போக்குவரத்து காவலர்களைக் காக்கும் விதமாக, தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

சிறு மின் விசிறியுடன் கூடிய நிழற்குடை அமைத்தல், நாள்தோறும் மூன்று முறை மோர் உள்ளிட்ட பானங்களை வழங்குதல் ஆகிய வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.

இந்நிலையில், குளிரூட்டியுடன் கூடிய தலைக்கவசம் (ஹெல்மெட்) அறிமுகமாகி உள்ளது.

இயற்கை நார்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த நவீன ‘ஏசி’ தலைக்கவசத்துக்கு காவலர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த தலைக்கவசத்துடன் ஒரு பேட்டரி இணைக்கப்பட்டுள்ளது. அதை இயக்கினால் தொப்பிக்குள் சில்லென்று உணர முடியும்.

தற்போது போக்குவரத்து காவலர்களுக்கு இதை விநியோகிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

குறிப்புச் சொற்கள்
வெயில்போக்குவரத்துகாவல்துறைதலைக்கவசம்பானம்

தொடர்புடைய செய்திகள்