சென்னை: தமிழ்த் திரையுலகில் பாலியல் தொல்லைகள் நிலவுவதாக சில தரப்பினர் கூறி வரும் நிலையில், அது குறித்து புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்படி, தமிழ்த் திரையுலகில் பாலியல் தொல்லைகள் குறித்து புகார் தெரிவிக்க ஏற்கெனவே தனிக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சருமான அவர் குறிப்பிட்டார்.
வியாழக்கிழமை சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாலியல் தொல்லைகள் குறித்த புகார்களின் பேரில் பாரபட்சமற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதிபடக் கூறினார்.
“பாலியல் தொல்லைகள் குறித்து புகார்கள் அளிப்பதற்கான தொலைபேசி எண்கள் வழங்கப்பட்டுள்ளன. புகார்களை அளிப்பதற்கான சிறப்புக் குழு தவிர, மனோதத்துவ நிபுணர்களும் உள்ளனர்,” என்றார் அமைச்சர் சாமிநாதன்.