சென்னை: நடிகர் பாபி சிம்ஹாவின் கார் ஓட்டுநர், மதுபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
அந்த விபத்தில் மூன்று பேர் காயமடைந்தனர்.
சென்னை கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தில் வெள்ளிக்கிழமை மாலை பாபி சிம்ஹாவின் கார் ஓட்டுநர் மதுபோதையில் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
இந்த விபத்தில் 6க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதமடைந்தன. மேலும் பெண் உள்பட மூவர் காயமடைந்துள்ளனர்.
இதையடுத்து பாபி சிம்ஹாவின் கார் பறிமுதல் செய்யப்பட்டு கார் ஓட்டுநர் புஷ்பராஜ் கைது செய்யப்பட்டார். விபத்து குறித்து புஷ்பராஜிடம் கிண்டி காவல்துறை விசாரித்து வருகிறது.
பாபி சிம்ஹாவின் தந்தையை இறக்கிவிட்டு வீடு திரும்பும்போது ஓட்டுநர் மதுபோதையில் காரை இயக்கியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.