234 தொகுதிகளிலும் நற்பணி இயக்கத்தை விரிவுபடுத்தும் தனுஷ்

234 தொகுதிகளிலும் நற்பணி இயக்கத்தை விரிவுபடுத்தும் தனுஷ்

100க்கும் மேற்பட்ட மாவட்ட அலுவலகங்களை அமைக்கத் திட்டம்
கோப்புப் படம்.

24 Nov 2026 - 5:18 pm

2 mins read

சென்னை: தமிழ்நாட்டிலுள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் தமது நற்பணி இயக்கத்தை விரிவுபடுத்தும் பணிகளில் நடிகர் தனுஷ் தீவிரமாக இறங்கியுள்ளார்.

தற்போது 58 மாவட்ட அலுவலகங்கள் செயல்பட்டுவரும் நிலையில், 38 வருவாய் மாவட்டங்களிலும் 100க்கும் மேற்பட்ட மாவட்ட அலுவலகங்களை அமைப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

திரைத்துறையில் 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள 43 வயதான தனுஷ், தமது அரசியல் நிலைப்பாடு குறித்து இதுவரை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.

இருப்பினும், ரசிகர் மன்றத்தை மக்கள்நல இயக்கமாக மாற்றும் முயற்சி தமிழ்நாட்டு அரசியல் வட்டாரத்தில் அவரது அரசியல் வருகை குறித்த ஊகங்களை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மாதம் இயக்கத்தைத் தொகுதிவாரியாக விரிவுபடுத்துமாறு தனுஷ் கேட்டுக்கொண்டதாக தனுஷிற்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறின.

புதிய அலுவலகங்களைத் தொடங்கவும் ஏற்கெனவே உள்ள கட்டமைப்பைப் பலப்படுத்தவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

அதன் ஒரு பகுதியாக, அக்டோபர் 14ஆம் தேதி கோயம்புத்தூரில் மாவட்ட நிர்வாகிகளுடனும் அக்டோபர் 25ஆம் தேதி சென்னையில் மகளிர் அணியினருடனும் தனுஷ் ஆலோசனை நடத்தினார்.

இயக்கத்தின் விரிவாக்கப் பணிகள், வரும் 2027 உள்ளாட்சித் தேர்தலில் தனுஷ் களமிறங்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

“எங்களது இருப்பை உணர்த்த 2031 சட்டமன்றத் தேர்தல் வரை நாங்கள் காத்திருக்க விரும்பவில்லை. உள்ளாட்சித் தேர்தல்களில் தீவிரமாகப் பங்கேற்பதன் மூலம் வலுவான அமைப்பைக் கட்டமைத்து, அரசியல் கள நிலவரத்தைப் புரிந்துகொள்ள விரும்புகிறோம்,” என்று அந்த வட்டாரங்கள் கூறின.

மகளிர் அணியை வலுப்படுத்துமாறு தனுஷ் உத்தரவிட்டுள்ள நிலையில், எதிர்காலத்தில் தமிழ்நாட்டு அரசியலில் புதிய சக்தியாக உருவெடுக்க வாய்ப்புள்ளதாக நிர்வாகிகள் கருதுகின்றனர்.

“கணிசமான ஆதரவுடன் மற்றொரு அரசியல் சக்தி உருவெடுத்தால், இரு கட்சிகளுக்கு இடையிலான தேர்தல் விவாதப் போக்கே மாறக்கூடும்,” என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்
தனுஷ்அரசியல்நற்பணிதேர்தல்