அரசியலில் நடிகர் லாரன்ஸ்; இடைத்தேர்தலில் களமிறங்க வாய்ப்பு

அரசியலில் நடிகர் லாரன்ஸ்; இடைத்தேர்தலில் களமிறங்க வாய்ப்பு

கோப்புப் படம்: தெலுங்கானா டுடே

08 Jun 2026 - 1:28 pm

1 mins read

சென்னை: நடிகர் ராகவா லாரன்ஸ் முழுநேர அரசியலில் ஈடுபட இருப்பதாகவும் திருச்சி கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் அவர் போட்டியிட உள்ளதாகவும் வெளியான தகவல் திரையுலக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் காலியாக உள்ள ஐந்து சட்டமன்றத் தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. அவற்றுள் முதல்வர் விஜய் போட்டியிட்டு, பின்னர் எம்எல்ஏ பதவியிலிருந்து விலகிய திருச்சி கிழக்குத் தொகுதியும் அடங்கும்.

இந்நிலையில், அத்தொகுதியில் நடிகர் ராகவா லாரன்ஸ் களமிறங்க இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

“நான் தேர்தலில் போட்டியிடப்போவதாக பல்வேறு ஊடகங்களில் செய்திகள் பரவி வருகின்றன. தற்போது படப்பிடிப்பில் உள்ளேன். 10ஆம் தேதியுடன் படப்பிடிப்புகள் நிறைவடையும்.

“என் தாயாரின் ஆசியுடன், எனது வாழ்க்கை தொடர்பான ஒரு முக்கியமான முடிவை வியாழக்கிழமை (ஜூன் 11) அறிவிக்க உள்ளேன்,” என ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்
நடிகர்இடைத்தேர்தல்முதல்வர்விஜய்திருச்சிபோட்டி